சுடச்சுட

  

  உ.பி. சட்டப்பேரவை, சட்டமேலவை சமாஜவாதி தலைவராக அகிலேஷ் ஒருமனதாக தேர்வு

  By DIN  |   Published on : 29th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AkhileshYadav

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, சட்ட மேலவை ஆகிய இரு அவைகளிலும் உள்ள சமாஜவாதி உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தேசியத் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
  உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏக்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் (எம்எல்சிக்கள்) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இரு அவைகளுக்கான சமாஜவாதி தலைவராக அகிலேஷ் யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌதுரி தெரிவித்தார். அதேபோல், இக்கூட்டத்தில் சட்டமேலவைக்கான கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகிலேஷ் யாதவிடம் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  சட்டப் பேரவைக்கான சமாஜவாதி கட்சியின் தலைவராக மூத்த எம்எல்ஏ கோவிந்த் சௌதுரியை அகிலேஷ் யாதவ் திங்கள்கிழமை தேர்வு செய்தார். அதேநேரத்தில், இந்த பதவிக்கு மூத்த தலைவர்கள் ஆஸம்கான், சிவ்பால் சிங் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
  அதேபோல் லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
  உத்தரப் பிரதேச சட்டமேலவை உறுப்பினராக அகிலேஷ் யாதவ் தற்போது உள்ளார். அந்த அவையில் சமாஜவாதி உறுப்பினர்களின் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் அகமது ஹாசன் தற்போது உள்ளார்.
  இதனிடையே, சட்டப் பேரவை சமாஜவாதி தலைவராக கோவிந்த் சௌதுரியை அகிலேஷ் நியமித்துள்ளதை ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி விமர்சித்துள்ளது. பாஜக நிர்ப்பந்தத்தின்பேரில் அகிலேஷ் யாதவ் செயல்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai