Enable Javscript for better performance
எதிரி சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    எதிரி சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 29th March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் உள்ள எதிரி சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1965-ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கணிசமான எண்ணிக்கையில் சிலர் குடியேறினர். அவ்வாறு பாகிஸ்தானில் குடியேறியவர்களுக்குச் சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துகள் எதிரி சொத்து என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1968-ஆம் ஆண்டு எதிரி சொத்துச் சட்டம் இயற்றப்பட்டது.
    இந்தச் சூழலில், இந்தச் சொத்துகளுக்கு யாரும் உரிமைக் கோருவதைத் தடுக்கும் வகையில் எதிரி சொத்துச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
    இந்நிலையில், எதிரி சொத்துகள் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் கூறியதாவது: இந்தியாவில் 9,280 எதிரி சொத்துகள் இருக்கின்றன. சுமார் 11,773 ஏக்கர் அளவில் இருக்கும் இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி என அவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai