சுடச்சுட

    

    ஏர் இந்தியா மேலாளரைத் தாக்கிய விவகாரம்: விமானத்தில் பயணிக்க எம்.பி.க்கு அனுமதி மறுப்பு

    By DIN  |   Published on : 29th March 2017 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏர்இந்தியா நிறுவன மேலாளரைத் தாக்கிய சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது.
    சிவசேனையைச் சேர்ந்த ரவீந்திர கெய்க்வாட், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. ஆவார்.
    இவர் புணேவிலிருந்து தில்லிக்குச் செல்ல ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் வகுப்பு இருக்கையை கடந்த வாரம் முன்பதிவு செய்திருந்தார்.
    ஆனால், பயணத்தின்போது அவருக்கு எக்கானமி வகுப்பு இருக்கை ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் விமான நிறுவன மேலாளர் சுகுமாரை ரவீந்திர கெய்க்வாட் தனது காலணியால் தாக்கினார்.
    இதுதொடர்பாக கெய்க்வாட் மீது தில்லி காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் விமானப் பயணம் மேற்கொள்வதற்கு அனைத்து விமான நிறுவனங்களும் தடைவிதித்தன. இந்நிலையில், மும்பையிலிருந்து புதன்கிழமை தில்லி செல்லும் ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் ஓர் இருக்கையை கெய்க்வாட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அந்தப் பயணச் சீட்டை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து அவர் விமானத்தில் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
    மேலாளரைத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்த ஓரிரு தினங்களிலேயே இண்டிகோ நிறுவனமும், தங்களது விமானத்தில் கெய்க்வாட்டை அனுமதிக்க மறுத்து அவரது பயணச்சீட்டை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    உரிமை மீறல் தீர்மானம்: இதனிடையே, கெய்க்வாடுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சிவசேனை எம்.பி. அனந்த்ராவ் அத்சுல் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதை ஏற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்,
    இதுகுறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai