சுடச்சுட

  

  ஐ.எஸ். செயல்பாடுகள் தொடர்பாக என்ஐஏ-வில் 19 வழக்குகள் பதிவு: மத்திய அரசு

  By DIN  |   Published on : 29th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) 19 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ராஜ் கங்காராம் அஹிர் கூறியதாவது:
  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை என்ஐஏ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், நாட்டில் அந்த இயக்கத்தின் சில செயல்பாடுகள் தொடர்பாக 19 வழக்குகளை என்ஐஏ அமைப்பு பதிவு செய்துள்ளது. இவற்றில் 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
  ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக கேரளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 22 பேர் சென்றது, ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மும்பையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பரப்பியது உள்ளிட்டவையும் இந்த வழக்குகளில் அடங்கும் என ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai