சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பதவி தேர்தல்: ஆர்எஸ்எஸ் தலைவரின் பெயரை நிராகரித்தது காங்கிரஸ்

  By DIN  |   Published on : 29th March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய குடியரசுத் தலைவராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை தேர்வு செய்யலாம் என்று சிவசேனை கட்சி முன்வைத்த யோசனையை காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டது.
  தங்களது கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அந்தப் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கும், புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்கும் அக்கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 29) கூட்டியுள்ளார்.
  இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை தேர்வு செய்யலாம் என்று சிவசேனை கட்சி திங்கள்கிழமை யோசனை தெரிவித்திருந்தது.
  இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் கோகோயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்; எங்களது கட்சி சார்பில் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை சரியான நேரத்தில் அறிவிப்போம். அதற்கு முன்பு எங்களது கட்சி ஆலோசனை நடத்தும்' என்றார்.
  லோக்பால் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு: லோக்பால் நியமனங்கள் குறித்தும் கௌரவ் கோகோயிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'லோக்பால் நியமனங்களில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிக்கிறது. முக்கிய நியமனங்களை செய்யாமல் அதை பலவீனப்படுத்தும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai