சுடச்சுட

  

  பெண்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் எம்.எம். ஹசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹசன், நிகழ்ச்சி ஒன்றில் திங்கள்கிழமை பேசியபோது, மாதவிடாய் என்பது அசுத்தமானது; அந்தகாலகட்டத்தின்போது பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
  அவரின் இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்தைக் கண்டித்து, திருவனந்தபுரத்தில் பெண்கள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, எம்.எம். ஹசன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அந்தக் கருத்து எனது சொந்தக் கருத்து கிடையாது; சமூகத்தில் நிலவும் கருத்தையே நான் தெரிவித்தேன்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai