சுடச்சுட

    

    ஜன் தன் சேமிப்புக் கணக்குகளை பராமரிக்க ரூ. 775 கோடி செலவு

    By DIN  |   Published on : 29th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜன் தன் சேமிப்புக் கணக்குகளைப் பராமரிப்பதற்காக ரூ. 774.86 கோடி செலவழித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
    ஜன் தன் சேமிப்புக் கணக்குகள் தொடர்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
    கடந்த 15-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 28.02 கோடி ஜன் தன் சேமிப்புக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் 1.8 கோடி கணக்குகளில் தலா ரூ. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை இருப்பிலுள்ளது.
    மேலும், பணப் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் கடந்த ஓராண்டில் சுமார் 92.52 லட்சம் ஜன் தன் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை, ஜன் தன் சேமிப்புக் கணக்குகளைப் பராமரிப்பதற்காக ரூ. 774.86 கோடி செலவழித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
    கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி வரை, பணம் இருப்பிலில்லாத ஜன் தன் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை 5.93 கோடியாகும். இந்த எண்ணிக்கை, கடந்த டிசம்பர் 28-ஆம் தேதியன்று 6.32 கோடியாக இருந்தது.
    அதே சமயம், மேற்கண்ட தேதிகளில் ஜன் தன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இருப்பில் இருந்த தொகை முறையே ரூ. 45,636 கோடி மற்றும் ரூ. 71,036 கோடி ஆகும் என்று சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
    விமான நிலையங்களில் திருட்டு சம்பவங்கள்: விமான நிலையங்களில் நடைபெற்ற திடுட்டு சம்பவங்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
    அதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்
    ஜெயந்த் சின்ஹா அளித்த பதிலில், 'தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 விமான நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 285 திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai