சுடச்சுட

    

    தில்லி, சென்னை உள்பட 9 நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

    By DIN  |   Published on : 29th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sunset1

    இந்தியாவில் தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று அமெரிக்க ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
    அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமி சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
    அதில், உலகம் முழுவதும் 44 நகரங்களில் நிகழாண்டு முதல் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, புணே, சூரத், ஹைதராபாத், ஆமதாபாத் ஆகிய நகரங்களும் அடங்கும்.
    இந்த நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் என்பது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட நகரங்களில் உணரப்பட்ட வெப்பத்தைக் காட்டிலும் எதிர்காலத்தில் 5-இலிருந்து 6 மடங்கு வரை அதிக வெப்பம் உணரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    புவி வெப்பமயமாததால் காற்றின் வெப்பநிலை அதிகரிப்பு, அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவையே இந்நகரங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்து வருதற்கு முக்கிய காரணமாகும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai