Enable Javscript for better performance
தேசியக் கொடியை அவமதித்த சீன அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசியக் கொடியை அவமதித்த சீன அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு

    By DIN  |   Published on : 29th March 2017 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நொய்டா: தில்லி அருகே நொய்டாவில் இருக்கும் சீன செல்லிடப் பேசி நிறுவனத்தில் பணிபுரியும் சீன அதிகாரி ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சீன அதிகாரி ஒருவர், இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், அதை குப்பைத் தொட்டியில் வீசியதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீன நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai