Enable Javscript for better performance
நீதிபதிகள் நியமன விவகாரம்: மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்தது உச்ச நீதிமன்ற கொலீஜியம்- Dinamani

சுடச்சுட

    

    நீதிபதிகள் நியமன விவகாரம்: மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்தது உச்ச நீதிமன்ற கொலீஜியம்

    By DIN  |   Published on : 29th March 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தைச் சாராதவர்களும் ஆலோசனை வழங்கலாம் என்ற மத்திய அரசின் பரிசீலனையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது.
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, அந்தந்த மாநிலங்களில் பணியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், அட்வகேட் ஜெனரல்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற கொலீஜியத்துக்கு ஆலோசனை வழங்கலாம் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடந்த ஆண்டு பரிந்துரைத்திருந்தது. இதற்கு அண்மையில் பதிலளித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசின் அந்தப் பரிந்துரையை நிராகரித்தது.
    உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற கொலீஜியத்தைச் சாராத பிறரது தலையீடு கூடாது என்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றங்களில் கொலீஜியம் முறையில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை ஆவணத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கடந்த ஜனவரி மாதம் முதல் முயன்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai