சுடச்சுட

    

    நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: மனுக்கள் மீது இன்று விசாரணை

    By DIN  |   Published on : 29th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் செயல்படுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றன.
    அவசர வழக்காகக் கருதி அவற்றை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மதுக்கடைகள் செயல்படுவது அதிக அளவில் சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த மதுக்கடைகளுக்குத் தடை விதிக்கும் வகையில் ஆயத்தீர்வைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் சனிக்கிழமை (ஏப்.1) முதல் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் செயல்பட அனுமதியில்லை என்று கடந்த டிசம்பரில் அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மதுவிற்பனை தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்களை மார்ச் 31-ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
    இந்தச் சூழலில், இந்த கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறும், உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசு சார்பிலும் கால நீட்டிப்பு கோரி அண்மையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
    இந்நிலையில், அந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
    இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிலை இருப்பதால் இதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டு புதன்கிழமை விசாரிப்பதாக அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai