சுடச்சுட

    

    பத்ம விருதுகள்: நிராகரிப்புப் பட்டியலில் தோனி, நடிகை ஸ்ரீதேவி!

    By DIN  |   Published on : 29th March 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhoni

    இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனி, நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
    ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆ ண்டில் மொத்தம் 89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டவுள்ளன.
    அதே நேரத்தில், பத்ம விருதுக்காக 18,000 பேருக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது தெரியவந்தது. நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது.
    தோனி, நடிகை ஸ்ரீதேவி, பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசைன், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, நடிகையும், சமாஜவாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெயா பச்சன், செய்தித் தொலைக்காட்சி பிரபலமான அர்னப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai