சுடச்சுட

    

    பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களுக்கு ஏப்ரல்-1 முதல் தடை!

    Published on : 29th March 2017 03:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BS_III

     

    புதுதில்லி: பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக அவை வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு பி.எஸ் என்னும் தர நிர்ணய முறை வாகனங்களுக்காக தயாரிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் தற்பொழுது விற்பனையாகும் வாகனங்களில் பி.எஸ் 3 தர நிர்ணய முறைதான்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை இன்று பிறப்பித்துள்ளது.

    அதன்படி பி.எஸ் 3 தர விதிமுறைகளை கொண்ட வாகனங்களை ஏப்ரல்-1 முதல் இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai