Enable Javscript for better performance
போபால் விஷ வாயு விபத்துப் பகுதியில் 336 டன் நச்சுக் கழிவுகள்: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    போபால் விஷ வாயு விபத்துப் பகுதியில் 336 டன் நச்சுக் கழிவுகள்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 29th March 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-ஆம் ஆண்டு விஷ வாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் 336 டன் எடை கொண்ட நச்சுக் கசிவுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பான கேள்விக்கு மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே செவ்வாய்க்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
    போபால் நகரில், விஷ வாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத் தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 336 டன் நச்சுக் கழிவுகள் உள்ளன.
    அவற்றைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் அங்கிருந்து அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. குடிநீரில் நச்சுத்தன்மையைக் கண்காணித்தல், நச்சுக் கழிவுகளைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிதல், 10 டன் நச்சுப் பொருளை சோதனை முறையில் அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
    32 ஆண்டுகளுக்கு முன்னர், போபாலின் யூனியன் கார்பைடு உர ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு விபத்தில் 3 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது, உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai