சுடச்சுட

  

  மராத்தியர் மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகளின் புத்தாண்டு தினத்தை (மார்ச் 29) முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  மராத்தியர்களின் புத்தாண்டான குடி பட்வா, காஷ்மீர் பண்டிட்களின் புத்தாண்டான நவ்ரே, தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஆகியவை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
  நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் புதன்கிழமை புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் ஏற்பட வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai