Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

    By DIN  |   Published on : 29th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடஒதுக்கீடு மற்றும் அரசு திட்டங்களை எளிதில் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியே செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் அனைத்துத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்குத் தேவையான ஒருங்கிணைந்த அடையாள அட்டைகள் இதுவரை அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை.
    இதனால், மாநில அரசு அல்லது மத்திய அரசால் வழங்கப்படும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையை மட்டுமே மாற்றுத்திறனாளிகள் வைத்துள்ளனர்.
    இந்நிலையில், அவர்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் அளித்த பதில்:
    கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    மாநில அளவிலும், தேசிய அளவிலும் அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறும் வகையில் ஒருங்கிணைந்த அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai