சுடச்சுட

  

  அமெரிக்கா: வேன் மோதி இந்தியப் பொறியாளர் சாவு: போதையில் இருந்த ஓட்டுநர் கைது

  By DIN  |   Published on : 30th March 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anshul

  அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பொறியாளர் மீது வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவரது மனைவி படுகாயமடைந்தார்.
  இச்சம்பவம் தொடர்பாக போதையில் இருந்த வேன் ஓட்டுரை கைது செய்த போலீஸார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர் அன்ஷுல் சர்மா (30). இவர் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் உள்ள ஒரு மோட்டார் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அன்ஷுல் சர்மா தனது மனைவி சமீராவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
  அப்போது, அங்கு அதிவேகமாக வந்த வேன் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அன்ஷுல் சர்மா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சமீரா படுகாயமடைந்தார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் சமீராவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் மைக்கெல் டெமையோ (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மது அருந்திவிட்டு வேனை ஓட்டியது தெரியவந்தது.
  இதனைத் தொடர்ந்து, அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai