சுடச்சுட

    

    இறைச்சி கூடங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து முகநூலில் பதிவிட்டவர் கைது

    By DIN  |   Published on : 30th March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத இறைச்சி கூடங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எதித்து முகநூலில் சர்ச்சைக்குரிய படத்தை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கூடங்களை மூடும் நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் அத்திக் கான் (30), இந்த நடவடிக்கைகளை எதிர்த்து முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படத்தையும், கருத்துகளையும் பதிவிட்டார்.
    இது குறித்து அப்பகுதியைச் சேந்த அனில் பிரஜாபதி என்பவர் போலீஸில் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் அத்திக் கானை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பொதுமக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai