சுடச்சுட

  
  GOPALAKRIC

  வறட்சி நிவாரண உதவியாக இலங்கைக்கு 100 டன் அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
  இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், 'இலங்கைக்கு எட்டு தண்ணீர் டேங்கர்களும், 100 டன் அரிசியும் தானமாக அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
  இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்: வறட்சி நிவாரண உதவி அளிக்கும்படி இலங்கை அரசிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
  இதை தொடர்ந்து, அந்நாட்டுக்கு 100 டன் அரிசியும், 8 தண்ணீர் டேங்கர் லாரிகளும் அளிப்பது என்ற முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது. இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான வறட்சியை முன்னிட்டு அந்நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்தப் பொருள்களை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
  அதன்படி, கடந்த மார்ச் 21-ஆம் தேதி இலங்கை அரசிடம் தண்ணீர் டேங்கர் லாரிகள் ஒப்படைக்கப்பட்டன. 100 டன் அரிசி கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் இவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடி நேரங்களில் அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதில் இந்தியா எப்போதும் முதலிடத்தில் உள்ளது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai