சுடச்சுட

  
  ndtiwari

  உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரி என்றழைக்கப்படும் நாராயண் தத் திவாரி, திடீர் உடல் நலக்குறைவால் லக்னெளவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  91 வயதாகும் அவர், நோய்த்தொற்று காரணமாக, செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  அவரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். என்.டி.திவாரியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக ராம் மனோகர் லோகியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் தீபக் மாளவியா கூறினார்.
  இதற்கு முன்பு, யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவியேற்பு விழாவில் என்.டி.திவாரி கலந்து கொண்டார். இந்நிலையில், முதல்வர் நேரில் வந்து நலம் விசாரித்ததால் திவாரியும், அவரது மகன் ரோஹித் சேகரும் நெகிழ்ச்சியடைந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai