சுடச்சுட

  
  mohanbha

  குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
  தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், ஜூலை 24-ஆம் தேதி நிறைவடையவிருக்கிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
  மேலும், குடியரசுத் தலைவர் பதவிக்கு மோகன் பாகவத் நல்ல தேர்வாக இருப்பார் என்று பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌட் இரு தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
  இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பாகவத், குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லையென்றும், அதுபோன்று ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள், வெறும் பொழுதுபோக்கு செய்திகளே என்றும் கூறினார்.
  அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் தலைவர் பதவிக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்படாது. அப்படியே பரிந்துரைக்கப்பட்டாலும், நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.
  குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. சங்க பரிவார உறுப்பினர் என்ற அடிப்படையில், இந்த அமைப்புக்கும், இந்த சமூகத்துக்கும் பணியாற்றவே என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai