சுடச்சுட

  

  கேரளம்: செவிலியர் தேர்வு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிபிஐ நடவடிக்கை

  By DIN  |   Published on : 30th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குவைத்தில் பணிபுரிவதற்காக கேரளத்தில் இருந்து செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.
  உதூப் வர்கீஸ் என்ற அந்த நபர், வளைகுடா நாடு ஒன்றில் இருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தபோது கைது செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
  குவைத் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்காக, கேரளத்தில் இருந்து செவிலியர்களை தேர்வு செய்யும் தனியார் முகமையை நடத்தி வந்த வர்கீஸ், அப்பணிக்காக விண்ணப்பிப்போரிடம் ரூ.19,500 கட்டணமாக பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரோ ஒவ்வொருவரிடமும் ரூ.19 லட்சம் வரை கட்டணமாக பெற்று, ரூ.300 கோடி வரை ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
  இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் இருந்து வளைகுடா நாடு ஒன்றுக்கு வர்கீஸ் தப்பிவிட்டார். அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது.
  இதனிடையே, இந்த ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, வர்கீஸுக்கு உடந்தையாக செயல்பட்ட குடியேற்றத் துறை அதிகாரி எல்.அடால்ஃபஸ் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், தற்போது வர்கீஸும் கைதாகியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai