சுடச்சுட

  

  கேரள முதல்வர் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு ஜாமீன்

  By DIN  |   Published on : 30th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத்துக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப் பிரிவு கூடுதல் தலைவராக இருந்தவர் குந்தன் சந்திராவத். இவர், கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன்தான் காரணம் என்று அண்மையில் குற்றம்சாட்டினார். மேலும், பினராயி விஜயனைக் கொன்று அவரது தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
  இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்த குந்தன் சந்திராவத், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். தொடர்ந்து, அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
  இதனிடையே, சந்திராவத் மீது மாதவ் நகர் போலீஸார் கடந்த 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் உஜ்ஜைனில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் உஜ்ஜைன் நகர மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  இந்நிலையில், தம்மை ஜாமீனில் விடுவிக்கக் கோரி உஜ்ஜைன் சிறப்பு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சந்திராவத் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு நீதிபதி பிரதீப் குமார் வியாஸ் ரூ.10000 பிணைத்தொகையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, சந்திராவத் செவ்வாய்க்கிழமை மாலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai