சுடச்சுட

  

  சசீந்திரன் மீதான குற்றச்சாட்டு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

  By DIN  |   Published on : 30th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக முன்னாள் கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  பெண் ஒருவரிடம் சசீந்திரன் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ பதிவு மலையாள செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியது. இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது அமைச்சர் பதவியை சசீந்திரன் உடனடியாக ராஜிநாமா செய்தார். எனினும், ராஜிநாமா செய்வதால் தம் மீதான குற்றச்சாட்டை தாம் ஒப்புக்கொண்டதாக அர்த்தமில்லை எனவும் சசீந்திரன் கூறியிருந்தார்.
  இதனிடையே, சசீந்திரன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காலை கூடியது. அப்போது, சசீந்திரன் மீதான குற்றச்சாட்டை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பி.எஸ். அந்தோனி தலைமையிலான குழு விசாரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதக்காலத்துக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai