சுடச்சுட

    

    சூரிய வணக்கமும், நமாஸும் ஒரே மாதிரியானதுதான்: யோகி ஆதித்யநாத்

    By DIN  |   Published on : 30th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yogiadi

    ''சூரிய வணக்கமும், முஸ்லிம்களின் நமாஸும் ஒன்றுதான்; சூரிய வணக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், சமூகத்தை மத அடிப்படையில் இரண்டாக பிளவுபடுத்த விரும்புகிறார்கள்'' என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில், அந்த மாநில யோகா மகோத்சவத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: முஸ்லிம்கள் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளும் நமாஸும், பிராணாயாமம் உள்பட சூரிய வணக்கத்தின்போது மேற்கொள்ளும் ஆசனங்களும் ஒரே மாதிரியானதுதான். சமூக நல்லிணக்கத்துக்கு எவ்வளவு அழகான முன்மாதிரி இது. ஆனால், யோகா மீது நம்பிக்கை இல்லாத, சிலர், சமூகத்தை ஜாதி, இனம், மதம், பிராந்தியம் அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    சூரிய வணக்கத்தில் இருக்கும் அனைத்து ஆசனங்களும், முஸ்லிம் சகோதரர்களின் நமாஸும் ஒரே மாதிரியானதுதான். ஆனால், அதை ஒரே மாதிரியானதாக்க யாரும் முயற்சி எடுக்கவில்லை. ஏனெனில், யோகா செய்வதை விட சிலர் சுகபோக வாழ்க்கையில்தான் ஆர்வம் கொண்டிருந்தனர்.
    கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு (மத்தியில் பாஜக ஆட்சியில் வருவதற்கு முன்பு) யோகா குறித்து பேசினால், அது மதவாதமாக பார்க்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைகள் எடுத்த பிறகு, அந்த எண்ணம் மாறிவிட்டது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் யோகா செய்ய வேண்டும்.
    உத்தரப் பிரதேச முதல்வர் பதவி எனக்கு அளிக்கப்பட இருப்பது குறித்து, அந்தப் பதவியை நான் ஏற்பதற்கு ஒருநாளுக்கு முன்புதான் கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். அப்போது அந்தப் பதவியை நான் ஏற்க மறுத்தால், பொறுப்பில் இருந்து தப்பிச் செல்வதாகிவிடும். எனவே சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு சென்றேன் என்றார் ஆதித்யநாத்.
    தீவிர ஹிந்துத்துவ வாதியாக அடையாளம் காணப்படும் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்ற பிறகு, மத அடிப்படையில் மக்களிடையே வேறுபாடு காட்டப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai