சுடச்சுட

  
  MohanBha

  ஜாதி மறுப்பு திருமணங்கள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து தில்லியில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
  நாட்டில் ஜாதி மறுப்பு திருமணங்கள் அதிக அளவில் நடைபெற வேண்டும். ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கட்டாயம் துணை நிற்க வேண்டும்.
  பொதுவாகவே, இதுபோன்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துணை நிற்பார்கள். ஏனெனில், ஆர்எஸ்எஸ் அமைப்பினரில் பெரும்பாலானோர் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.
  சமூக சமத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்கள், ஆட்சி - அதிகாரத்தில் இருப்பார்களேயானால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களை அவர்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
  குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நிதிகள் வழங்கப்பட்டாலே அது பெரிய நன்மையாக இருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளே, அந்த சமூகத்தினரின் பாதி பிரச்னைகளை தீர்த்து வைத்துவிடும்.
  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசாங்கத்தில் இருந்தால் இந்த விஷயத்தில் அவர்கள் கட்டாயம் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன் என்றார் மோகன்பாகவத்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai