Enable Javscript for better performance
தண்டனைக் காலம் முடியும் முன் எந்த கைதியையும் விடுவிக்கக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தண்டனைக் காலம் முடியும் முன் எந்த கைதியையும் விடுவிக்கக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 30th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள சிறைகளில் உள்ள கைதிகளில், தண்டனை காலம் முடியும் முன் எவரையும் விடுவிக்கக் கூடாது என்று அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
    இதுதொடர்பாக, திருச்சூரைச் சேர்ந்த பி.டி.ஜோசப் என்பவர், கொச்சி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் உள்பட பல கைதிகளை, அவர்களது தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
    அந்த மனு மீது தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் சிங் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, கேரள அரசுக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
    இந்த விவகாரத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது. எனினும், தங்களை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் கைதிகளின் மனுக்களை பரிசீலிக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், சிறை விதிமுறைகள் அடங்கிய கையேட்டை சமர்ப்பிக்கும்படி சிறைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai