சுடச்சுட

    

    பஞ்சாப்: விவசாயிகளின் நிலங்களை விற்க வங்கிகள் அனுமதிக்கப்பட மாட்டாது

    By DIN  |   Published on : 30th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amrinder

    பஞ்சாபில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் அமைப்புகள் அந்தக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் விவசாயிகளின் நிலங்களை விற்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
    விவசாயக் கடன்கள் தொடர்பாக அந்த மாநில சட்டப் பேரவையில் சிரோமணி அகாலிதளம் கட்சி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான விக்ரம் சிங் மஜிதியா கேள்வி எழுப்பியிருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் விவசாயிகளை வங்கி அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவான என்.கே.சர்மா பேசுகையில், 'தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்' என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா பேசுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்துக்குப் பதிலளித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது:
    விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் அந்தக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் விவசாயிகளின் நிலங்களை விற்க அனுமதிப்பதில்லை என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. நிலுவையில் உள்ள விவசாயக் கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
    கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் நிலங்கள் ஏலத்தில் விடப்படுவதைத் தடை செய்வதற்காக ஒரு புதிய சட்டத்தை மாநில அரசு இயற்ற உள்ளது என்றார் அமரீந்தர் சிங்.
    இதனிடையே, சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பர்மிந்தரர் சிங் திண்ட்சா பேசுகையில், மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய அரசு நிதியை நிறுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நவஜோத் சிங் சித்து, 'முந்தைய சிரோமணி-பாஜக கூட்டணி அரசு சிந்தடிக் மருந்துகளை மட்டுமே விற்பனை செய்து வந்தது. தற்போது விவசாயிகள் குறித்துக் கவலைப்படும் சிரோமணி அகாலி தளம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது தூங்கிக் கொண்டிருந்ததா?' என்று கேள்வி எழுப்பினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai