சுடச்சுட

    

    பணம் கொண்டு செல்லும் வேன்களை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் கைது

    By புதுதில்லி  |   Published on : 30th March 2017 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லும் வேன்களை திட்டமிட்டு வழிப்பறி செய்யும் கும்பலைச் சேர்ந்த நபரை வடமேற்கு தில்லியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    வெங்கட் (எ) ராஜு என்ற அந்த நபரும், அவரது கும்பலைச் சேர்ந்தவர்களும் தாங்கள் கொள்ளை அடிக்க நினைக்கும் வேன்களை முதலில் நோட்டம் விடுகின்றனர். அதன் பின்னால் தொடர்ந்து சென்று, வழித்தடத்தை அறிந்துகொள்கின்றனர்.

    பின்னர், அந்த வழித்தடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். கொள்ளை முயற்சியின்போது முதலில் இரு சக்கர வாகனத்தில் அந்த வேனை பின்தொடர்ந்து அதன் வழியை மறிக்கின்றனர்.

    பின்னர் அதன் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்களை ஆயுதங்கள் கொண்டு மிரட்டி இறக்கிவிட்டு, வேனை கடத்திச் செல்கின்றனர். பணத்தை கொள்ளையடித்த பிறகு, தங்கள் இருப்பிடத்தில் வந்து பதுங்கிக் கொண்டு, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது, அந்தப் பணத்துடன் தப்பிவிடுகின்றனர்.

    இந்நிலையில், வடமேற்கு தில்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் தனது கூட்டாளியைச் சந்திக்க வெங்கட் வருவதாகவும், கொள்ளைச் சம்பவம் குறித்து திட்டமிட உள்ளதாகவும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு காத்திருந்து கடந்த 25-ஆம் தேதி வெங்கட் கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    அவர் தில்லி, மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார் என்று போலீஸார் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai