சுடச்சுட

  
  mulayamsing

  ''உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தவறான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததால், மாநிலத்தில் அந்தக் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது'' என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.
  மக்களவையில் சரக்கு-சேவை வரி தொடர்பான 4 துணை மசோதாக்கள் மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அவர், மேலும் கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் ஆட்சியில் மக்களுக்கு இலவசமாக கல்வி அளித்தோம், மருத்துவம் அளித்தோம். விவசாயிகள் நலனுக்காக பாடுபட்டோம். எனினும், சமீபத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம்.
  ஆனால், நீங்கள் (பாஜக), உத்தரப் பிரதேச மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஒரு துணிச்சலான பிரதமர் கிடைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் பாஜகவை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர்.
  உத்தரப் பிரதேச மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். மக்களின் நம்பிக்கை அனைத்தும் மிக விரைவில் நொறுங்கவுள்ளது.
  கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்ற வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், அந்த மாநில மக்கள் என்ன செய்வார்கள் என்பதை பிறகு நீங்களே பார்ப்பீர்கள்.
  நாட்டில் யாரும் பட்டினியால் துன்பப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு என்ன செய்துள்ளது? மக்களிடையே பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகவும் அரசு என்ன செய்துள்ளது? என்றார் முலாயம் சிங் யாதவ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai