சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துங்கள்: காவல்துறையினருக்கு உ.பி. முதல்வர் அறிவுரை

    By DIN  |   Published on : 30th March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    YogiAdityanath

    பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வையும், குற்றவாளிகள் மத்தியில் பயத்தையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக, லக்னௌவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி அவர் பேசியதாவது:
    காவல்துறையினரின் செயல்பாடுகள், வெளிப்படைத் தன்மையுடனும், ஊழலின்றியும் இருக்க வேண்டும். பொதுமக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுடன், சிறிய சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து காவல்துறையினர் செயல்பட வேண்டும்.
    தங்களது பரபரப்பான பணிகளுக்கு இடையே, காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் ஒதுக்கி, சில கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், பொதுமக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியும். இதுபோன்று, காவல்துறையினர் செயல்படும் பாணியில் மாற்றத்தை கொண்டுவந்தால், குற்றவாளிகள், சமூக விரோதிகள் மத்தியில் பயத்தையும், மக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் உருவாக்க முடியும்.
    குற்றவாளிகள், சமூக விரோதிகளுடன் கைகோத்து செயல்படும் சில கருப்பு ஆடுகள், காவல்துறையில் இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு, களையெடுக்க வேண்டும்.
    காவல்துறையினரிடையே ஒழுக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். தங்களது வீடு மட்டுமன்றி, அலுவலகமும் தூய்மையாக இருப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
    காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருவோர், உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அடுத்த மாதம் 5-ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுவதையொட்டி, அயோத்தியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், அங்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
    மணல் கடத்தல்காரர்கள், பசு கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் யோகி ஆதித்யநாத்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai