சுடச்சுட

  

  போலி ஜாதிச் சான்றிதழ் மூலம் அரசுத் துறைகளில் 1,832 நியமனங்கள்

  By DIN  |   Published on : 30th March 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுத் துறைகளில் போலியான ஜாதிச் சான்றிதழ்களின் அடிப்படையில் 1,832 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
  இது தொடர்பாக அவர் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு புதன்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
  போலியான எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய ஜாதிச் சான்றிதழ்களின் அடிப்படையில் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்து தகவல் சேகரிக்க மத்திய அரசு 2010-இல் முயற்சியெடுத்தது. அதன்படி பல்வேறு துறைகளிடம் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி மொத்தம் 1,832 நியமனங்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது. அவற்றில் அதிகபட்சமாக 1,200 பணிநியமனங்கள் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி சார்ந்த அமைப்புகளிலேயே நடந்துள்ளன.
  இந்நிலையில், போலியான ஜாதிச் சான்றிதழ்களை அளித்து அரசுப் பணி பெற்ற 1,832 பேரில் 276 பேர் பணியிடை நீக்கம் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டனர். 521 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1,035 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன என்று ஜிதேந்திர சிங் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai