சுடச்சுட

  

  அமெரிக்க விசா கட்டுப்பாடு: மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்

  By DIN  |   Published on : 31st March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  H1Bvisa

  இந்தியர்களுக்குப் பாதகமான விசா நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பான எந்தவிதக் கொள்கைகளையும் அமெரிக்க அரசு இதுவரை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
  ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
  மாநிலங்களவையில் இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழக்கிழமை பேசியதாவது:
  இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு திறன் வாய்ந்த இந்தியர்களின் பங்களிப்பும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
  இந்தச் சூழலில், விசா வழங்கும் நடைமுறைகளில் சில கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்தியர்களுக்கான பணிவாய்ப்பில் சில சிக்கல்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், இதுதொடர்பாக எந்தவிதக் கொள்கைகளையோ அல்லது சட்டங்களையோ அமெரிக்க அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
  இந்த விவகாரம் குறித்து அந்நாட்டுடன் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது. நமது தரப்பு கருத்துகளும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் நலன் சார்ந்த விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
  1.5 லட்சம் பேருக்கு விசா: இதனிடையே, 1.5 லட்சம் இந்தியர்களுக்கு பணிமுறை விசாக்களை அமெரிக்கா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 1.2 லட்சம் பேருக்கு ஹெச்1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்தத் தகவலைக் கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai