சுடச்சுட

    

    இன்று வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
    வழக்குரைஞர் சட்டத் திருத்த மசோதா 2017-இல் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
    உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இருப்பினும், சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வெள்ளைப் பட்டையை கைகளில் அணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
    வழக்குரைஞர்கள் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய சட்ட ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, அதற்கான வரைவு மசோதா தயார் செய்யப்பட்டது. நீதிமன்றப் புறக்கணிப்புகளில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் அதில் வகை செய்யப்பட்டுள்ளது.
    மேலும், போராட்டங்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள், தங்களது மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதியும் அதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    அதன்படி வெள்ளிக்கிழமை அத்தகைய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai