சுடச்சுட

  

  உ.பி. சட்டப் பேரவைத் தலைவராக ஹிருதய் நாராயண் தீட்சித் தேர்வு

  By DIN  |   Published on : 31st March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  HRIDAY-1

  உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தலைவராக, பாஜக மூத்த தலைவர் ஹிருதய் நாராயண் தீட்சித் (69), வியாழக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து முறை எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அண்மைக்காலம் வரை பாஜக சட்ட மேலவைத் தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார்.
  உத்தரப் பிரேதச சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு ஹிருதய் நாராயண் தீட்சித் ஒருவர் மட்டுமே புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். பேரவைத் தலைவர் பதவிக்கு ஹிருதய் நாராயண் தீட்சித்தை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் பாஜக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களும், சுயேச்சைகளும் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.
  அதையடுத்து, உத்தரப்பிரதேச சட்டப் பேரவையின் புதிய தலைவராக, ஹிருதய் நாராயண் தீட்சித் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
  அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிருதய் நாராயண் தீட்சித்தின் வழிகாட்டுதலுடன் சட்டப்பேரவை அலுவல்கள் கருத்து வேறுபாடுகளின்றி சுமுகமாக நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
  மேலும், ''பொது வாழ்வில் ஈடுபடுவோர், எழுதுவது மிகவும் சிரமமான காரியம். இந்தச் சூழலில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை நீங்கள் (தீட்சித்) எழுதியிருக்கிறீர்கள். உங்களது படைப்புத்திறன் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களை அவைத் தலைவராகப் பெற்றதற்கு இந்தப் பேரவை பெருமை கொள்கிறது'' என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
  ஆதித்யநாத்துக்கு 'இஸட் பிளஸ்' பாதுகாப்பு: இதனிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆயுதமேந்திய வீரர்களுடன் 'இஸட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுவரை கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில், அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai