சுடச்சுட

  

  உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக இந்தியா மீது பாக். குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 31st March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா குற்றம்சாட்டியுள்ளார்.
  இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது:
  இந்திய உளவாளி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு இந்தியா உதவுவது வெளிப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவியும் அளித்து வருகிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து தலையிட்டு வருவது உலகம் அறிந்ததுதான்.
  மும்பையில் உள்ள ஜின்னா (பாகிஸ்தானை உருவாக்கியவர்) இல்லத்தை இடிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. மங்கள் பிரதாப் லோதா பேசியுள்ளார். ஜின்னா இல்லத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு உரிய மரியாதையை இந்தியா அளிக்க வேண்டும். இது தொடர்பாக பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இந்திய அரசிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம்.
  காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பாவி காஷ்மீரிகளின் ரத்தத்தை வீதிகளில் சிந்த வைக்கும் இந்திய ராணுவத்தின் கொடூரத்தை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அளித்துள்ளது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai