சுடச்சுட

    
    Last_day_for4


    சென்னை: ஏப்ரல் 1ம் தேதிக்குப் பிறகு பிஎஸ்-3 பைக்குகளை விற்பனை செய்யவும் வாகனப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், கடைசி நாளான இன்று பைக் வாங்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    வாகன விலையில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் வாகன விற்பனை டீலர்களிடம் இருந்த பிஎஸ்-3 வாகனங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

    நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், வாகனங்களை இன்று வாங்குவதால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை என்கிறார்கள் டீலர்கள்.

    வாகன டீலர்கள், ஒவ்வொரு இரு சக்கர வாகனத்தையும் விற்ற உடனேயே இன்வாய்ஸ் போட்டு விடுவார்கள். மார்ச் 31ம் தேதிக்குள் வாகனத்தை விற்பனை செய்துவிட்டால் அதை வைத்து ஏப்ரல் 31ம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் வாகனப் பதிவு (ரெஜிஸ்டர்) செய்து கொள்ளலாம். அதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று தெரிவிக்கின்றனர்.

    அதே போல, புதிய வாகனங்களை விற்பனை செய்யவும் வாகனப் பதிவுக்கும் தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, பழைய பிஎஸ்3 வாகனங்களை வாங்கவும் விற்கவும் எந்த தடையும் இல்லை. எனவே, பொதுமக்கள் தங்கள் கைவசம் இருக்கும் வாகனங்களை விற்கவோ பழைய பிஎஸ்3 வாகனங்களை வாங்கவோ தயக்கம் காட்ட வேண்டாம் என்கிறார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai