சுடச்சுட

  
  jidendar

  சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி காஷ்மீர் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் தூண்டிவிடுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சரான அவர், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு, காஷ்மீர் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிடுகின்றன.
  அதுபோன்ற பொய்ப் பிரசாரங்களில் மயங்கிவிட வேண்டாம் என்று காஷ்மீர் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
  காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் மீது கல் எறியவும், வன்முறையில் ஈடுபடவும் இளைஞர்களை ஒரு சில தலைவர்கள் தூண்டிவிடுகின்றனர்.
  ஆனால், அதே தலைவர்கள் தங்களது பிள்ளைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று படித்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார் அவர்.
  காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  இந்தச் சூழலில், பிரதமர் அலுவலக இணையமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் தொகுதி எம்.பி.யான ஜிதேந்திர சிங்கை, அந்த மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.பி. வாயித் சந்தித்துப் பேசினார். அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜிதேந்திர சிங் இவ்வாறு பதிலளித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai