Enable Javscript for better performance
'கோவா மக்களிடம் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    'மக்களின் விருப்பத்துக்கு எதிராக கோவாவில் பாஜக ஆட்சி அமைத்ததற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து காங்கிரஸின் அகில இந்திய செயலர் கிரீஷ் சோடாங்கர், கோவா தலைநகர் பனாஜியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவாவில் தேர்தல் முடிவுக்கு மாறாக வலுக்கட்டாயமாக பாஜக ஆட்சி அமைத்ததற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அண்மையில், கோவாவில் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்து விட்டனர்.
    இருப்பினும், புறவாசல் வழியாக அக்கட்சி கோவாவில் ஆட்சி அமைத்துவிட்டது. கோவாவில் வரும் 9-ஆம் தேதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தில் பாஜக ஈடுபட உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை வெறும்
    13 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
    ஏன் மற்ற தொகுதிகளில் தோல்வி அடைந்தோம் என்பது குறித்து பாஜக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் 17 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸிடம் இருந்தும் அக்கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் கிரீஷ் சோடாங்கர்.
    கோவாவில் மொத்தம் உள்ள 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
    அந்த மாநிலத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai