சுடச்சுட

    

    கோவா, மணிப்பூர் ஆளுநர்களின் செயல்பாடு குறித்து விரைவில் விவாதம்: மாநிலங்களவை துணைத் தலைவர் உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PJKurien

    கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களது செயல்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள உகந்த தீர்மானத்தின் மீது கூடிய விரைவில் விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் அருண் ஜேட்லிக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் உத்தரவிட்டார்.
    மாநிலங்களவை அலுவல்கள் வியாழக்கிழமை தொடங்கிய உடன் கோவா, மணிப்பூர் மாநில ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு எதிராக தாம் சமர்ப்பித்திருந்த உகந்த தீர்மானம் கடந்த 2 வாரங்களாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் இருப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.
    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்த போதிலும் ஆட்சி அமைக்க அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்கள் அழைப்பு விடுக்கவில்லை. இது அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. உகந்த தீர்மானம்ஜ்ஜ் கொண்டுவரப்படாமல் ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக அவையில் விவாதிக்க முடியாது. எனவே, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி, துணைத் தலைவர் குரியன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அவை முன்னவர் அருண் ஜேட்லி ஆகியோரிடம் உகந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், கடந்த 2 வாரங்களாக அதன் மீது எந்தவொரு விவாதமும் நடத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.
    அதைத் தொடர்ந்து, ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிரான உகந்த தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் கூடிய விரைவில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை அவை முன்னவர் அருண் ஜேட்லியிடம் தெரிவிக்குமாறு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு குரியன் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai