சுடச்சுட

    

    சட்டவிரோத இறைச்சி கூடங்கள் மூடல்: இறைச்சி உற்பத்தியாளர்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 31st March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத இயந்திர இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் நடவடிக்கைகளை அகில இந்திய இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
    இதுகுறித்து அந்த அமைப்பின் பிரதிநிதி ஹாஜி ஷகீல் குரேஷி வியாழக்கிழமை கூறியதாவது:
    முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி, சமாவாதி கட்சி ஆட்சிகளின்போது இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டு வந்தன.
    புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, இறைச்சி உற்பத்தியாளர்கள் அந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
    சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சட்டப்பூர்வமாக இயங்கும் இறைச்சிக் கூடங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் இல்லை.
    சட்டவிரோத இறைச்சிக்கூடங்களை சட்டப்பூர்வமாக்க உரிமையாளர்கள் விரும்பினால், அந்தக் கூடங்களை அவர்கள் நவீனமயமாக்க வேண்டும் என்றார் குரேஷி.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai