சுடச்சுட

  
  Bajaj_plant


  சென்னை: சென்னையைப் பொருத்தவரை இரு சக்கர வாகனங்களின் விலைகளில் வரலாறு காணாத வகையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏராளமான வாகனங்கள் இன்று ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன.

  பிஎஸ்-3 இரு சக்கர வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்யவும் வாகனப் பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

  இதையடுத்து இருக்கும் இரண்டு நாட்களில், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் வகையில் வாகன விற்பனை டீலர்கள் அதிரடியாக விலையில் தள்ளுபடியை அறிவித்தனர்.

  ரூ.5 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை விலையில் தள்ளுபடி வழங்கப்பட்டதை அடுத்து, நேற்று இரவு முதலே வாகன விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

  இன்று மதியத்துக்குள், சென்னையில் பரவலாக அனைத்து டீலர்களிடமும் பிஎஸ்-3 வாகனங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

  ஒட்டுமொத்த இந்தியாவில் சுமார் 8 லட்சம் பிஎஸ்-3 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள். இரண்டு நாளில் இதில் பெருமளவு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

  சென்னையில், வாகன விற்பனை சலுகை அறிவிப்பை அறிந்து மதியத்துக்குப் பிறகு இரு சக்கர வாகனம் வாங்க சென்ற பொது மக்கள், கடை கடையாக ஏறி இறங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பல இடங்களில் கிடைக்கும் ஒரே பதில்.. விற்பதற்கு வாகனம் இல்லை என்பதே.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai