சுடச்சுட

  

  தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு

  By புதுதில்லி  |   Published on : 31st March 2017 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul

  தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.  

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 பெண்கள் உட்பட 74 விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

  இந்நிலையில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அப்போது அவர் விவசாயிகளின் கோரிக்கைகளை  கேட்டு அறிந்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி விவசாயக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்றார். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai