சுடச்சுட

  

  தலாக் முறைக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் மே 11-இல் விசாரணை

  By DIN  |   Published on : 31st March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme_court

  இஸ்லாமியர்களின் தலாக் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய நடைமுறைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது, வரும் மே 11-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  மூன்று முறை தலாக் கூறிவிட்டு விவாகரத்துப் பெறும் முத்தலாக் முறை, விவாகரத்து செய்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும் 'நிக்கா ஹலாலா முறை', பலதார மணம் ஆகிய நடைமுறைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த நடைமுறைகளை ரத்து செய்யக் கோரியும் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
  அதன்படி, மத்திய அரசு அப்போது தாக்கல் செய்த பதில் மனுவில், 'இஸ்லாமியர்களின் தலாக் உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்தக் கருத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  மேலும், தலாக் உள்ளிட்ட நடைமுறைகள் இஸ்லாமிய மதப் பழக்க வழக்கங்களுள் ஒன்று என்றும், இதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு ஆராய்வது சரியல்ல எனவும் உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அண்மையில் தெரிவித்திருந்தது.
  இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது, தலாக் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரும் மே 11-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai