சுடச்சுட

  
  delhi-metro

  மெட்ரோ ரயிலில் புதன்கிழமை பயணம் செய்யத் திரண்ட கூட்டம். இடம்: புது தில்லி மெட்ரோ ரயில் நிலையம்.

  தில்லி மெட்ரோ ரயில்களில் இந்த நிதியாண்டில் இதுவரை 100 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
  தலைநகர் தில்லி போக்குவரத்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வரும் தில்லி மெட்ரோ ரயில்களில் தினமும் பல்வேறு பகுதிகளுக்கு லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  கடந்த 2016, ஏப்ரல் 1 முதல் 2017, மார்ச் 29-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தில்லி மெட்ரோ ரயில்களில் மொத்தம் 100 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
  தில்லி மெட்ரோ ரயில்களின் பயணிகள் எண்ணிக்கை ஓராண்டில் 100 கோடியை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், கடந்த நிதி ஆண்டுடன் (2015-16) ஒப்பிடுகையில் பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 6.56 சதவீதம் அளவு அதிகரித்துள்ளது. அதேபோன்று, கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
  2012-13-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ ரயில்களில் 70.29 கோடி பேர், 2013-14-இல் 80.17 கோடி பேர், 2014-15-இல் 87.09 கோடி பேர், 2015-16-இல் 94.69 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
  உலகளவில் உள்ள மெட்ரோ அமைப்புகளில் அதிகம் பேர் பயணிக்கும் முன்னிலைப் பட்டியலில் தில்லி மெட்ரோ 10-ஆவது இடத்தில் உள்ளது. தற்போது தில்லியில் 6 பெட்டிகள் கொண்ட 128 மெட்ரோ ரயில்கள், 8 பெட்டிகள் கொண்ட 58 ரயில்கள், நான்கு பெட்டிகள் கொண்ட 41 ரயில்கள் என மொத்தம் 227 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிரிக்கும் வகையில் கூடுதலாக 258 புதிய பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்தப் பணியை அடுத்த நிதியாண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai