சுடச்சுட

    

    தொல்லியல் ஆய்வுப் பகுதிகளில் பாலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப் பரிந்துரை

    By DIN  |   Published on : 31st March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனி) மகேஷ் சர்மா தெரிவித்தார்.
    இது தொடர்பாக மக்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் மகேஷ் சர்மா மாநிலங்கவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:
    வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்குமாறு மத்திய கலாசார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. தொல்லியில் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அனைத்து நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள், தொல்லியல் இடங்கள் ஆகியவற்றை 'பாலீத்தின் இல்லாத பகுதி'யாக இந்திய தொல்லியில் துறை அறிவித்துள்ளது.
    இந்த விஷயத்தில் தேவையான உத்தரவுகளைப் பின்பற்றுமாறு அனைத்து தொல்லியல் துறையின் கள அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    இந்த விஷயம் தொடர்பாக கலாசார அமைச்சகத்தின் செயலர் அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
    அதில், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவிடங்களை பாலித்தீன் இல்லாத பகுதியாக உருவாக்க தேவையான ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் மகேஷ் சர்மா.
    ஈஎஸ்ஐசி: தொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழகத்தின் (ஈஎஸ்ஐசி) மருத்துவமனைகள் தொடர்பாக திருச்சி சிவா எம்பி எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர், ஊழியர்கள் நலன்கள் இணையமைச்சர் (தனி) பண்டாரு தத்தாத்ரேயா புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், 'தமிழகத்தில் சென்னை கே.கே. நகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai