சுடச்சுட

  

  "நமாமி பிரம்மபுத்திரா' விழாவை இன்று தொடக்கி வைக்கிறார் பிரணாப்

  By DIN  |   Published on : 31st March 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நமாமி பிரம்மபுத்திரா (பிரம்புத்திரா நிதியை வணங்குதல்) விழாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறார்.
  "இந்தியாவின் மிகப் பெரிய நதித் திருவிழா' என்ற பெயரில் அந்த மாநிலத்தின் 21 மாவட்டங்களில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.
  இதன்மூலம், அஸ்ஸாமின் சுற்றுலா, வர்த்தகம், கலாசாரம் ஆகியவை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டப்படும்.
  இந்த விழாவில் திபெத்திய பௌத்த மத குரு தலாய் லாமா, யோகா குரு பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மகேஷ் சர்மா, திரளான சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  இந்த விழா குறித்து அந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் கூறுகையில், "நமது கலாசாரத்தின் வலிமையையும், பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்ட நமக்கு கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு நமாமி பிரம்மபுத்திரா திருவிழா' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai