சுடச்சுட

  

  நாடு முழுவதும் 1 கோடி மழை நீர் சேகரிப்பு மையங்கள்: மத்திய அரசு திட்டம்

  By DIN  |   Published on : 31st March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rain

  நாடு முழுவதும் 1.11 கோடி மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய குடிநீர் வடிகால் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
  மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும்கூறியதாவது: இந்தியாவில் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவதற்கான வரைவுத் திட்டத்தை மத்திய குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கி வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 23 லட்சம் மழை நீர் சேகரிப்பு மையங்களையும், நகர்ப் பகுதிகளில் 88 லட்சம் மழை நீர் சேகரிப்பு மையங்களையும் அமைக்க அந்த வரைவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீர் வடிநிலையங்கள், கல்சுவர் தடுப்புகள் போன்ற பல்வேறு முறைகளில் இந்த மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  குடிநீர் தரத்தை மேம்படுத்தவும், அதிலிருந்து ஃபுளோரைடுகள், நைட்ரேட்டுகள் உள்ளிட்ட ரசாயன மாசுக்களை வெளியேற்றவும் அந்த வரைவுத் திட்டத்தில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai