Enable Javscript for better performance
நாளை முதல் விமான நிலைய பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை முதல் விமான நிலைய பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம்

    By DIN  |   Published on : 31st March 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டில் உள்ள 7 விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறையில் சனிக்கிழமை முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் பயணிகளின் தங்கள் கையில் எடுத்துச் செல்லும் பைகளில் பரிசோதனைச் சீட்டை தொங்கவிட வேண்டிய அவசியமில்லை.
    தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
    வழக்கமாக, விமானத்துக்குள் பயணிகள் தங்களுடன் எடுத்து வரும் கைப்பை உள்ளிட்டவற்றில் பரிசோதனைச் சீட்டை தொங்கவிட வேண்டும். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதனை சோதனையிட்டு பரிசோதனைச் சீட்டில் சீலிடுவார்கள். அதன் பிறகுதான் பயணிகள் தங்கள் கைப்பை உள்ளிட்டவற்றை விமானத்துக்குள் எடுத்துச் செல்ல முடியும்.
    இனிமேல், மேற்கண்ட 7 விமான நிலையங்களிலும் வழக்கமான சோதனை இருந்தாலும், பரிசோதனைச் சீட்டை பைகளில் தொங்கவிடும் நடைமுறை மட்டும் இருக்காது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai