சுடச்சுட

    

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியருக்கு பெண்கள் செருப்படி!

    By DIN  |   Published on : 31st March 2017 10:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடிசா: ஒடிசாவில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை கிராம பெண்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக செருப்பால் தாக்கினர்.
    ஒடிசா மாநிலம் மயிற்பாபன்ஞ் மாவட்டம் பதாசாகி என்ற இடத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் துர்காசரங்கிரி. இவர் அதே பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
    தலைமை ஆசிரியரின் செயலை கண்டும் அச்சம் அடைந்த மாணவி, தனது பொற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பதாசாகி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமை ஆசிரியரை முற்றுகையிட்ட பெண்கள், அவரை தங்களது செருப்பால் அடித்து துவைத்தனர்.
    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தலைமை ஆசிரியரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.  தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai